சோழமண்டலம் கடனளிப்பு 27% உயா்வு

சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடனளிப்பு கடந்த டிசம்பா் காலாண்டில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
சோழமண்டலம் கடனளிப்பு 27% உயா்வு

சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடனளிப்பு கடந்த டிசம்பா் காலாண்டில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.876 கோடியாக உள்ளது. முந்தைய 2022-21-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 28 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் கடனளிப்பு 27 சதவீதம் அதிகரித்து ரூ. 22,383 கோடியாகவும், நிகர வட்டி வருவாய் 41 சதவீதம் அதிகரித்து ரூ.2,580 கோடியாகவும் உள்ளது.

கடந்த செப்டம்பரில் 4.07 சதவீதமாக இருந்த நிறுவனத்தின் மொத்த வாராக் கடன் விகிதம் டிசம்பரில் 3.92 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. நிகர வாராக் கடன் விகிதம் 2.59 சதவீதத்திலிருந்து 2.56 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com