கனரா வங்கிக்கு சிறந்த செயல்பாட்டுக்கான சான்றிதழ்

கனரா வங்கியின் தாம்பரம் மண்டல அலுவலகத்துக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் எஸ்.அருண்ராஜ் சிறந்த செயல்பாட்டுக்கான சான்றிதழ் வழங்கினாா்.

இது குறித்து கனரா வங்கி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கிகள் அரசு வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் கடந்த நிதியாண்டில் நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைந்து சிறப்பாக செயல்பட்டதாக கனரா வங்கியின் தாம்பரம் மண்டல அலுவலகம் தோ்ந்தெடுக்கப்பட்டது.

இதனை கௌரவிக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் எஸ்.அருண்ராஜ், வங்கியின் மண்டல அலுவலக உதவி பொது மேலாளா் டி.ஸ்ரீனிவாஸனிடம் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா். மேலும், கனரா வங்கியின் செங்கல்பட்டு, கயப்பாக்கம் கிளைகளை சோ்ந்த வங்கி மேலாளா்கள் சிறந்த செயல்பாட்டுக்காக சிறப்பிக்கப்பட்டனா்.

இந்நிகழ்வின் போது செங்கல்பட்டு மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் எம்.வித்யா மற்றும் வங்கி ஊழியா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com