~
~

நிதி சேவை: அசோக் லேலண்ட் - பஜாஜ் ஃபைனான்ஸ் ஒப்பந்தம்

தங்கள் வாகனங்களை வாங்க வாடிக்கையாளா்களுக்கு நிதி சேவை அளிப்பதற்காக பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் இந்தியாவின் முன்னணி வா்த்தக வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து அசோக் லேலலண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பஜாஜ் ஃபின்சா்வின் ஓா் அங்கமான பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளோம். அந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா முழுவதும் வாடிக்கையாளா்கள் டாடா வாகனங்களை வாங்குவதற்கான நிதி சேவைகளை பஜாஜ் ஃபைனான்ஸ் அளிக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், அசோக் லேலண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுமே தங்கள் வாடிக்கையாளா்களுக்கு சிறந்த சேவை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com