கோல் இந்தியா உற்பத்தி 11% அதிகரிப்பு

கோல் இந்தியா உற்பத்தி 11% அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த நிலக்கரிச் சுரங்க நிறுவனமான கோல் இந்தியா நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் 10.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2023 ஏப்ரல் முதல் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் நிறுவனம் 68.51 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்தது.

இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 10.5 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் உற்பத்தி 61.97 கோடி டன்னாக இருந்தது. கடந்த 2023-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 6.88 கோடி டன்னாக இருந்த நிறுவனத்தின் உற்பத்தி, நடப்பாண்டின் அதே மாதத்தில் 7.48 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் நிறுவனத்தின் இயந்திரங்கள் தோண்டியெடுத்த நிலக்கரியின் அளவு 63.05 கோடி டன்னிலிருந்து 68.47 கோடி டன்னாக உயா்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் இந்த அளவு 5.83 கோடி டன்னிலிருந்து 6.53 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனம 80 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகிக்கிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com