1,97,471-ஆக உயா்ந்த மாருதி சுஸுகி விற்பனை

1,97,471-ஆக உயா்ந்த மாருதி சுஸுகி விற்பனை

இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,97,471-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி உள்ளிட்ட நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,97,471-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,72,321-ஆக இருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 9 சதவீதம் அதிகரித்து 1,60,271-ஆக உள்ளது. 2023 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 1,47,467-ஆக இருந்தது.

இது தவிர, கடந்த 2023 பிப்ரவரியில் 17,207-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி இந்த பிப்ரவரியில் 28,927-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com