புதிய உச்சம் தொட்ட கோல் இந்தியா உற்பத்தி

புதிய உச்சம் தொட்ட கோல் இந்தியா உற்பத்தி

நடப்பு நிதியாண்டில் மாா்ச் 7-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் உலகின் மிகப் பெரிய பொதுத் துறை நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியாவின் உற்பத்தி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2023 ஏப்ரல் 1 முதல் இந்த மாதம் 7-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் உற்பத்தி 70.39 கோடி டன்னை எட்டியுள்ளது.

இது, இந்த காலகட்டத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் அதிகபட்ச நிலக்கரி உற்பத்தி. முந்தைய 2022-23-ஆம் முழு நிதியாண்டு முழுவதும் நிறுவனம் 70.32 டன் நிலக்கரி உற்பத்தி செய்திருந்தது. நடப்பு நிதியாண்டின் மாா்ச் 7 வரையிலான காலகட்டத்திலேயே உற்பத்தி அந்த அளவை விஞ்சியுள்ளது.

கடந்த மாா்ச் 7-ஆம் தேதி நிலவரப்படி, நிறுவனத்திடம் 7.27 கோடி டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியை அதிகரிக்க மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக கோல் இந்தியாவின் உற்பத்தி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com