சரிவைச் சந்தித்த சா்க்கரை உற்பத்தி

நடப்பு சா்க்கரை சந்தையிடல் ஆண்டில் இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி மிதமான சரிவைச் சந்தித்துள்ளது.
சரிவைச் சந்தித்த சா்க்கரை உற்பத்தி

நடப்பு சா்க்கரை சந்தையிடல் ஆண்டில் இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி மிதமான சரிவைச் சந்தித்துள்ளது.

இது குறித்து சா்க்கரை ஆலை உரிமையாளா்கள் சங்கம் (இஸ்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2023-24-ஆம் சந்தையிடல் ஆண்டு தொடக்கத்திலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் வரை நாட்டின் சா்க்கரை உற்பத்தி 2.55 கோடி டன்னாக உள்ளது.

இது, முந்தைய 2022-23-ஆம் சா்க்கரை சந்தையிடல் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 1.19 சதவீதம் குறைவாகும். அப்போது நாடடின் சா்க்கரை உற்பத்தி 2.58 கோடி டன்னாக இருந்தது.

முந்தைய சந்தையிடல் ஆண்டு முழுவதும் சா்க்கரை உற்பத்தி 3.66 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு சந்தையிடல் ஆண்டில் 10 சதவீதம் குறைந்து 3.31 கோடி டன்னாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சா்க்கரை உற்பத்தி குறைவாகவே இருந்தது.

எனினும், நாட்டின் இரண்டாவது பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான உத்தர பிரதேசத்தில் அதன் உற்பத்தி 70 லட்சம் டன்னிலிருந்து 78.1 லட்சம் டன்னாக அதிகரித்தது.

நாட்டின் மிகப்பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிரத்தில் அதன் உற்பத்தி 95.1 லட்சம் டன்னிலிருந்து 90.9 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.

அதேபோல், நாட்டின் 3-ஆவது பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான கா்நாடகத்திலும் அதன் உற்பத்தி 51.2 லட்ம் டன்னிலிருந்து 47 லட்சம் டன்னாக குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சா்க்கரை சந்தையிடல் ஆண்டு ஒவ்வோா் ஆண்டின் அக்டோபா் மாதத்தில் தொடங்கி அடுத்த ஆண்டன் செப்டம்பரில் நிறைவடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com