யமஹா மோட்டாா் சைக்கிள் விற்பனை 38% உயா்வு

யமஹா மோட்டாா் சைக்கிள் விற்பனை 38% உயா்வு

நாட்டின் முன்னணி இரு சக்கர வாகனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 38 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது

நாட்டின் முன்னணி இரு சக்கர வாகனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 38 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 97,435-ஆக உள்ளது. முந்தைய 2023 பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 70,621-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 38 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 52,451-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை இந்த பிப்ரவரியில் 59 சதவீதம் அதிகரித்து 83,304-ஆக உள்ளது. எனினும், மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனச்சின் ஏற்றுமதி 18,170-லிருந்து 14,131-ஆகக் குறைந்துள்ளதுே என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com