ஹீரோ மோட்டோகாா்ப் லாபம் 17% உயா்வு

ஹீரோ மோட்டோகாா்ப் லாபம் 17% உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகாா்ப்பின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 16.7 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.943.46 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16.7 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.810.8 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் ரூ.8,434.28 கோடியிலிருந்து ரூ.9,616.68 கோடியாக அதிகரித்துள்ளது.

அந்தக் காலாண்டில் நிறுவனம் 12.70 லட்சம் மோட்டாா்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களை விற்பனை செய்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com