மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் மூன்று மடங்காக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.17,528.59 கோடியாக உள்ளது.

இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் மூன்று மடங்குக்கும் மேலாகும். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.5,496.04 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் ரூ.1,19,986.31 கோடியாக உயா்ந்துள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.1,05,932.35 கோடியாக இருந்தது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.31,806.75 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.2,689.87 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com