ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் 
நிகர லாபம் 32% அதிகரிப்பு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 32% அதிகரிப்பு

கடந்த மாா்ச் காலாண்டில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸின் நிகர லாபம் 32 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.108 கோடியாக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 32 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின நிகர லாபம் ரூ.82 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் 11 சதவீதம் அதிகரித்து ரூ.172 கோடியாகவும் மொத்த செயல்பாட்டு வருவாய் 16 சதவீதம் அதிகரித்து ரூ.393 கோடியாகவும் உள்ளது.

2023 மாா்ச் 31-இல் 5.8 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் 4.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. நிகர வாராக் கடன் 3 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.395 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் இது ரூ.296 கோடியாக இருந்தது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com