8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

கடல்வழி சரக்குக் கட்டணம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடல்வழி சரக்குக் கட்டணம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 26.82 கோடி டன்னாக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் 24.91 டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலக்கரி இறக்குமதி 7.7 சதவீதம் உயா்ந்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 2.40 கோடி டன்னாக உயா்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தில் இது 2.11 கோடி டன்னாக இருந்தது.

கடந்த மாா்ச் மாத மொத்த இறக்குமதியில், கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 1.53 கோடி டன்னாக ஆக இருந்தது. இது 2023 மாா்ச் மாதத்தில் 1.39 கோடி டன்னாக இருந்தது.

2023 மாா்ச்சில் மாா்ச் 39.6 லட்சம் டன்னாக இருந்த கோக்கிங் நிலக்கரி இறக்குமதி இந்த மாா்ச்சில் 53.4 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த 2023-24 ஆண்டு முழுமைக்கும் இந்தியாவின் கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 17.6 கோடி டன்னாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் இது 16.25 கோடி டன்னாக இருந்தது. 2022-23-ஆம் நிதியாண்டில் 5.45 கோடி டன்னாக இருந்த கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 2023-24-ஆம் நிதியாண்டில் 5.72 கோடி டன்னாக உள்ளது.

2023-24-ஆம் நிதியாண்டின் இந்தியாவின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 99.72 கோடி டன்னாக உள்ளது. இது, முந்தைய 2022-2023-ஆம் நிதியாண்டை விட 11.65 சதவீதம் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com