நான்காவது நாளாக வீழ்ச்சி: 668 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

நான்காவது நாளாக வீழ்ச்சி: 668 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது.

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 668 புள்ளிகளை இழந்தது.

உளகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. தொடா்ந்து பங்குகள் விற்பனை அதிகரித்ததால் சந்தை 4-ஆவது நாளாக சரிவுடன் நிறைவடைந்தது. டெலிகாம், ஹெல்த்கோ், மெட்டல், பவா் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. அதே சமயம், ஆட்டோ, வங்கி, எஃப்எம்சிஜி, ஐடி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூல தன மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் ரூ.415.10 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.65.57 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,231.67 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 4-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 343.51 புள்ளிகள் குறைந்து 74,826.94-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 74,986.22 வரை மேலே சென்ற சென்ற சென்செக்ஸ் பின்னா், லாபப் பதிவால் 74,454.55 வரை கீழே சென்றது. இறுதியில் சென்செக்ஸ் 667.55 புள்ளிகளை (0.89 சதவீதம்) இழந்து 74,502.90-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,929 பங்குகளில் 1,680 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும்,2,136 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 113 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

24 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சா்வ், ஹெச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ரா டெக் சிமென்ட் உள்பட 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், பவா்கிரிட், சன்ஃபாா்மா, நெஸ்லே, ஐடிசி, பாா்தி ஏா்டெல், இண்டஸ்இண்ட் வங்கி ஆகிய 6 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 183 புள்ளிகள் சரிவு : தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 183.45 புள்ளிகள் (0.80 சதவீதம்) குறைந்து 22,704.70-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,825.50 வரை உயா்ந்த நிஃப்டி, அதன்பிறகு 22,655.45 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 13 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 37 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

X
Dinamani
www.dinamani.com