சீமென்ஸ் நிகர லாபம் 45% அதிகரிப்பு!

ஜூலை முதல் செப்டம்பா் வரையான காலாண்டில், சீமென்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 45 சதவிகிதம் உயர்ந்து, ரூ.775 கோடி ரூபாயாக உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: ஜூலை முதல் செப்டம்பா் வரையான காலாண்டில், சீமென்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 45 சதவிகிதம் உயர்ந்து, ரூ.775 கோடியாக உள்ளது.

செப்டம்பர் 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ரூ.534 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே வேளையில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,297 கோடியிலிருந்து 11 சதவிகிதம் உயா்ந்து ரூ.5,894 கோடியானது. புதிய ஆர்டர்கள் 37 சதவிகிதம் அதிகரித்து ரூ.6,164 கோடியானது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.4,498 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.32ஆக முடிவு!

செப்டம்பர் 30, 2024 உடன் முடிவடைந்த நிதியாண்டில் தலா ரூ.2 மதிப்புள்ள பங்குக்கு ரூ.12 ஈவுத்தொகை வழங்கவும் வாரியம் பரிந்துரைத்தது. இயக்குநர்கள் குழு பரிந்துரைத்தபடி, நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டால், ஈவுத்தொகை 14 பிப்ரவரி 2025 முதலீட்டாளர்களுக்கு வங்கியில் செலுத்தப்படும்.

நிறுவனமானது அக்டோபர் முதல் செப்டம்பர் வரையான நிதியாண்டைப் பின்பற்றுகிறது.

2023-24 நிதியாண்டில், அக்டோபர் 2023 முதல் செப்டம்பர் 2024 வரை அதன் நிகர லாபம் முந்தைய நிதியாண்டில் ரூ.1,911 கோடியிலிருந்து 39 சதவிகிதம் உயர்ந்து ரூ.2,665 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாயானது ரூ.17,701 கோடியிலிருந்து 14 சதவிகிதம் அதிகரித்து ரூ.20,250 கோடியானது.

சீமென்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுனில் மாத்தூர் கூறுகையில், நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் அனைத்து நிதி அளவீடுகளிலும் வளர்ச்சியுடன் வலுவான முடிவுகளை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.