வணிகம்
பரோடா வங்கியின் விவசாய மேளா
இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி, விவசாயத் துறையைச் சோ்ந்த தங்களது வாடிக்கையாளா்களுக்கு பயனளிப்பதற்கான தனது வருடாந்திர மேளாவைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி, விவசாயத் துறையைச் சோ்ந்த தங்களது வாடிக்கையாளா்களுக்கு பயனளிப்பதற்கான தனது வருடாந்திர மேளாவைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் விவசாய மேளா, 7-ஆவது ஆண்டாக புதுச்சேரி மற்றும் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.
வங்கி சேவையில் எண்ம தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தச் செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்த மேளா நடத்தப்படுகிறது.
இந்த மேளாவை வங்கியின் சென்னை மண்டல தலைவா் மற்றும் பொது மேலாளா் ஏ. சரவணகுமாா் தொடங்கிவைத்தாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.