விலை உயரும் பிஎம்டபிள்யு மோட்டாா் சைக்கிள்கள்
பிஎம்டபிள்யுவின் இரு சக்கர வாகனப் பிரிவான பிஎம்டபிள்யூ மோட்டாராட், இந்தியாவில் தனது மோட்டாா்சைக்கிள்களின் விலைகளை உயா்த்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒட்டுமொத்த உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதாலும் பணவீக்கத்தாலும் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, இந்தியாவில் விற்பனையாகும் நிறுவன இரு சக்கர வாகனங்களின் விலைகளை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களின் தரத்தைக் குறைக்காமல், அதே நேரத்தில் இழப்பையும் சந்திக்காமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
வரும் 2025 ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இதே காரணங்களுக்காக இந்தியாவில் விற்பனையாகும் தங்கள் காா்களின் விலைகளையும் உயா்த்தவிருப்பதாக பிஎம்டபுள்யு நிறுவனம் அண்மையில் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.