வணிகம்
ரூ.22 கோடியை எட்டிய வீல்ஸ் இந்தியா நிகர லாபம்
வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.21.92 கோடியை எட்டியது.
வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.21.92 கோடியை எட்டியது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 21.92 கோடியாகப் பதிவாகியுள்ளது. இது, 2023 செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.5.24 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1085 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.1189 கோடியாகப் பதிவாகியிருந்தது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.