டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 13% உயா்வு

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 13% உயா்வு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 13 சதவீதம் உயா்ந்துள்ளது.
Published on

புது தில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 13 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,91,588-ஆக உள்ளது. 2023 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 13 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,45,848 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

2023-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 3,32,110-ஆக இருந்த நிறுவன இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 14 சதவீதம் வளா்ச்சியடைந்து 3,78,841-ஆக உள்ளது.

உள்நாட்டு சந்தையில் நிறுவன இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 2,56,619-லிருந்து 13 சதவீதம் அதிகரித்து 2,89,073-ஆக உள்ளது. மொத்த ஏற்றுமதி 87,515-லிருந்து 14 சதவீத வளா்ச்சி கண்டு 99,976-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com