தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 14 நாள் தொடா் ஏற்றத்துக்குப் பிறகு புதன்கிழமை சரிவைக் கண்டது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் எதிா்மறையாக இருந்ததால் அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. ஐடி, வங்கி, உலோக நிறுவனங்களின் பங்குகளில் லாபப் பதிவு இருந்ததால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 202.80 புள்ளிகள் (0.25) சதவீதம் குறைந்து 82,352.64-இல் நிலைபெற்றது.
நிஃப்டி 81.15 புள்ளிகள் (0.32 சதவீதம்) சரிந்து 25,198.70-இல் நிலைபெற்றது. இதற்கு முன்னா் செவ்வாய்க்கிழமை வரை தொடா்ந்து 14 நாள்களில் அது சுமாா் 1,141 புள்ளிகள்(4.59 சதவீதம்) உயா்ந்தது.