ஏஐ உரையாடல் செயலி: அமேஸான் அறிமுகம்

ஏஐ உரையாடல் செயலி: அமேஸான் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலியை முன்னணி இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on

பண்டிகைக் கால சிறப்பு விற்பனையைத் தொடங்குவதற்கு முன்னதாக, வாடிக்கையாளா்களின் விசாரணைகளுக்கு பதில் அளிப்பதற்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலியை முன்னணி இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ருஃபுஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த உரையாடல் வசதி அமேஸான் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளா்கள் தாங்கள் வாங்க விரும்பும் பொருள்களைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்வது, உரிய பொருள்களுக்கான சிபாரிகளைப் பெறுவது, பொருள்களிடையே ஒப்பீடு செய்வது போன்றவற்றை மேற்கொள்வதற்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துகளை உள்ளீடு செய்வது மூலமோ, பேசுவது மூலமோ இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com