ரூ.5,000 கோடி திரட்டும் இந்தியன் வங்கி

ரூ.5,000 கோடி திரட்டும் இந்தியன் வங்கி

உள்கட்டமைப்பு கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.5,000 கோடி திரட்டவிருப்பதாக பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
Published on

உள்கட்டமைப்பு கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.5,000 கோடி திரட்டவிருப்பதாக பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீண்டகால உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி மூலதனம் திரட்ட வங்கியின் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நடப்பு 2024- 25 நிதியாண்டில் வங்கி ஏற்கனவே திரட்டியுள்ள ரூ.5,000 கோடியுடன் கூடுதலாக ரூ.5,000 கோடி வரை திரட்ட இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு திட்டங்கள், மலிவு விலை வீட்டு வசதி உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்காக, தேவைக்கேற்ப ஒரே முறையிலோ, பகுதி பகுதியாகவோ கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டு இந்த மூலதனம் திரட்டப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com