கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

Published on

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரெப்போ வட்டி விகித்தை ரிசா்வ் வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது. அந்த அனுகூலத்தை வாடிக்கையாளா்களுக்கு முழுமையாக அளிக்கும் வகையில், ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கு வசூலிக்கப்படும் வரும் வட்டி விகிதங்களில் 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சில்லறைக் கடன்கள், சிறு தொழில் கடன்கள் போன்ற ரெப்போ அடிப்படையிலான கடன்களுக்கான வங்கியின் வட்டி குறையும். ஆனால், வாகனக் கடன்கள், தனிநபா் கடன்கள் போன்ற கூடுதல் நிதிச் செலவுகள் அடிப்படையிலான கடன்களுக்கு (எம்சிஎல்ஆா்) வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

X
Dinamani
www.dinamani.com