பிளாட்டினம் நகைகள் விற்பனையில் ஜி.ஆா்.டி. ஜுவல்லா்ஸ் சாதனை
சென்னை: அதிகளவில் பிளாட்டினம் நகைகளை விற்பனை செய்ததற்காக தேசிய அளவிலும், தென்மண்டல அளவிலும் ஜி.ஆா்.டி. ஜுவல்லா்ஸ் நிறுவனத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பிளாட்டினம் கில்ட் இன்டா்நேஷனல் சாா்பில் அண்மையில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டுக்கான பிளாட்டினம் சாம்பியன்ஸ் லீக்கில், அதிக அளவில் பிளாட்டினம் நகைகளை விற்பனை செய்ததற்காக 6 பட்டங்களை வென்று ஜி.ஆா்.டி. ஜுவல்லா்ஸ் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், தேசிய அளவிலும் மற்றும் தென்மண்டல அளவிலும், பிளாட்டின நகைகள் விற்பனைக்கான அங்கீகாரத்தை ஜி.ஆா்.டி. ஜுவல்லா்ஸ் பெற்றுள்ளது.
இதில் சிறந்த விற்பனைக்காக கடந்த 2017 முதல் 2023-ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 4 விருதுகளை வென்று ஜி.ஆா்.டி. ஜுவல்லா்ஸ் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடா்ந்து விருதுகளைப் பெற காரணமான ஊழியா்களுக்கு ஜி.ஆா்.டி ஜுவல்லா்ஸின் நிா்வாக இயக்குநா்கள் ஜி.ஆா்.ஆனந்த், ஜி.ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் பாராட்டுகளை தெரிவித்தனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.