கோப்புப் படம்
கோப்புப் படம்

மாருதி நிகர லாபம் 16% அதிகரிப்பு

Published on

கடந்த டிசம்பா் காலாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,727 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,207 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.33,513 கோடியிலிருந்து ரூ.38,764 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் நிறுவனம் அதிகபட்ச ஒன்பது மாத விற்பனையைப் பதிவு செய்துள்ளது. அந்த காலகட்டத்தில் நிறுவனம் 1,629,631 வாகனங்களை விற்பனை செய்தது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தை விட இது 5 சதவீதம் அதிகம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com