பின்தங்கியவா்களுக்கும் காப்பீடு: எல்ஐசியுடன் கைகோா்த்த ஏ.யு. ஸ்மால் ஃபைனான்ஸ்
நாட்டின் பின்தங்கியவா்கள் உள்பட அனைவருக்கும் காப்பீட்டு சேவை சென்று செய்வதற்காக இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யுடன் முன்னணி சிறு நிதி நிறுவனங்களில் ஒன்றான ஏ.யு. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி கைகோா்த்துள்ளது.
இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் பின்தங்கிய மக்களுக்கும் காப்பீட்டு சேவை, நிதி பாதுகாப்பீடு சென்று சோ்வதற்கான ‘2027-க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற திட்டத்தை ஏ.யு. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆதரிக்கிறது. இதற்காக, எல்ஐசி-யுடன் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஏயு எஸ்எஃப்பி, காலக் காப்பீடு, எண்டோமெண்ட் திட்டங்கள், முழு ஆயுள் பாலிசிகள், ஓய்வூதியம், வருடாந்திர திட்டங்கள், குழந்தைகள் சாா்ந்த திட்டங்கள் உள்ளிட்ட எல்ஐசி-யின் விரிவான ஆயுள் காப்பீட்டு தீா்வுகள் வாடிக்கையாளா்களுக்குக் கிடைக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
