

புதுதில்லி: சன் டிவி நெட்வொர்க்ஸ் லிமிடெட், செப்டம்பர் வரையான 2-வது காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபமாக 13.37% சரிந்து ரூ.354.69 கோடியாக இருப்பதாக இன்று தெரிவித்தது.
சென்ற ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ரூ.409.45 கோடி வரிக்குப் பிந்தைய லாபமாக இருந்தது.
செப்டம்பர் வரையான காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து அதன் வருவாய் 38.95% குறைந்து ரூ.1,299.87 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.935.7 கோடியாக இருந்தது.
செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் 55.29% அதிகரித்து ரூ.923.51 கோடியாக உள்ளது. இருப்பினும், இதர வருமானங்கள் உள்பட சன் டிவி நெட்வொர்க்கின் மொத்த வருமானம் இந்த காலாண்டில் 30% அதிகரித்து ரூ.1,439.82 கோடியாக இருந்தது.
நிதியாண்டின் முதல் பாதியில், சன் டிவியின் மொத்த ஒருங்கிணைந்த வருமானம் ரூ.2,919.01 கோடியாக இருந்தது. இது கிட்டதட்ட 13.67% அதிகமாகும்.
இதற்கிடையில், சன் டிவி இடைக்கால ஈவுத்தொகையாக 75% அதாவது ஒரு பங்கிற்கு ரூ.5 வீகிதம் ரூ.3.75 என அறிவித்தது.
சன் டிவி நெட்வொர்க்ஸ் லிமிடெட் பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் தலா ரூ.561.75 ஆக முடிவடைந்தன.
இதையும் படிக்க: டிஷ் டிவியின் Q2 நிகர இழப்பு ரூ.132.65 கோடியாக உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.