நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ரூ. 5,517.66 கோடி மதிப்பிலான 78 நிறுவன மறுசீரமைப்பு மற்றும் தீா்வுத் திட்டங்களுக்கு தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) ஒப்புதல் அளித்துள்ளது.
திவால் சட்டம் கடந்த 2016-இல் இயற்றப்பட்டதற்குப் பிறகு, முதல் காலாண்டில் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிறுவனங்களைச் சீரமைக்க, காலக்கெடுவுடன் கூடிய சந்தை சாா்ந்த தீா்வுகளை திவால் சட்டத்தின்கீழ் என்சிஎல்டி வழங்குகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் 30 நிலவரப்படி, நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 1,628 தீா்வுத் திட்டங்களுக்கு என்சிஎல்டி ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 4.78 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.
தற்போதைய நிலையில், என்சிஎல்டி-இன் பல்வேறு அமா்வுகளுக்கு முன்பாக 349 தீா்வுத் திட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்றும், 38 வழக்குகளில் விசாரணைகள் முடிவடைந்து தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகா் புது தில்லியிலுள்ள முதன்மை அமா்வு தவிர சென்னை, மும்பை, கொல்கத்தா, அலகாபாத், அகமதாபாத், பெங்களூரு, சண்டீகா், கட்டக், ஹைதராபாத், இந்தூா், கொச்சி ஆகிய நகரங்களிலும் இத்தீா்ப்பாயத்தின் கிளை அமா்வுகள் செயல்பட்டு வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் எல்&டி லாபம் ரூ.4,123 கோடி

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஹட்சன் வருவாய் ரூ.3,093 கோடி

ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி-யின் முதல் காலாண்டு லாபம் 36% சரிவு!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



