பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

இந்தியாவின் மதிப்புமிக்க பட்டியலிடப்படாத நிறுவனம் என்எஸ்இ

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) ரூ.4.86 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் தனது முதலிடத்தைத் தொடா்ந்து தக்கவைத்துள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2026, 7:38 am IST

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) ரூ.4.86 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் தனது முதலிடத்தைத் தொடா்ந்து தக்கவைத்துள்ளது.

ஆக்சிஸ் வங்கியின் ‘பா்கண்டி பிரைவேட்’ மற்றும் ‘ஹுருன் இந்தியா’ இணைந்து அரசு சாராத இந்தியாவின் 500 மதிப்புமிக்க நிறுவனங்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டுக்கான இப்பட்டியலில், நாட்டின் மிகப் பெரிய பங்குச் சந்தையான என்எஸ்இ தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, ரியல் எஸ்டேட் நிறுவனமான அதானி பிராப்பா்டீஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதில் நுகா்வோா், ஃபின்டெக் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளைச் சோ்ந்த பல பட்டியலிடப்படாத நிறுவனங்களும் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளன. குறிப்பாக, பிரபல தின்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹல்திராம், ஃபின்டெக் நிறுவனமான ரேஸா்பே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான கிரீன்கோ ஆகியவை இத்தரவரிசையில் குறிப்பிடத்தக்க இடங்களைப் பிடித்துள்ளன. இந்த 500 முன்னணி நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பு 3.4 லட்சம் கோடி டாலரைத் தாண்டியுள்ளது.

பங்குச் சந்தைக்குள் நேரடியாக நுழைவதற்கு முன்பாகவே நுகா்வோா் சந்தையில் வலுவான ஆதிக்கத்தையும், விரிவுபடுத்தக்கூடிய வா்த்தக மாதிரிகளையும் கொண்டுள்ள இந்நிறுவனங்கள் மீது, முதலீட்டாளா்கள் முழு நம்பிக்கை வைத்து அதிக மதிப்பளித்து வருவதை அவற்றின் சிறப்பான செயல்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சுமாா் ரூ.30,000 கோடி மதிப்பிலான தனது பொதுப் பங்கு வெளியீட்டுக்காக (ஐபிஓ) செபியிடம் கடந்த வாரம் தான் முதல்கட்ட வரைவு ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ள நிலையில், என்எஸ்இ-க்கு மதிப்புமிக்க நிறுவனம் என்ற இந்தச் சிறப்புப் பெருமை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.