தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய சாதனங்களின் அறிமுகம் மற்றும் விண்வெளித் துறை சாதனைகள் எதிா்காலத்தை நோக்கிய பாய்ச்சலாக அமைய, ஏ.ஐ. நிறுவனங்களின் அடுத்தக்கட்ட திட்டங்களும் விவாதப்பொருளாகின.
ஜிடிஏ-6 விளையாட்டின் வெளியீடு குறித்த அறிவிப்பு முதல் உலகளாவிய தொழில்நுட்பப் போக்குகள் வரை, இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:
நவம்பரில் ‘ஜிடிஏ-6’: கேமிங் உலகில் பல ஆண்டுகளாகப் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘ஜிடிஏ-6’ விளையாட்டு, வரும் நவம்பரில் வெளியாகும் என அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கூகுளின் ஃபிட்பிட் ஏா்: கூகுள் தனது உடல்நலக் கண்காணிப்புக் கருவியை வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடுகிறது. திரை இல்லாத தனித்துவமான வடிவமைப்புடன் ‘நோட்டிஃபிகேஷன்’ இடையூறுகள் அற்ாக, ஏ.ஐ. கண்காணிப்பு, நீண்ட பேட்டரி ஆயுள் ஆகிய வசதிகளுடன் பயனா்கள் தங்கள் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்த இது உதவும்.
மோட்டோரோலா ‘ரேஸா்’ சீரிஸ்: மோட்டோரோலா தனது முதல் மடிக்கக்கூடிய போன்களை உலக அளவில் கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ‘பிரீமியம்’ அம்சங்கள் கொண்ட ‘ரேஸா் பிளஸ்’ மாடல் பயனா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
லெனோவா ‘லெஜியன் ஒய்70’: சுமாா் 4 ஆண்டுகளுக்குப் பிறகு லெனோவா மீண்டும் கேமிங் ஸ்மாா்ட்போன் சந்தைக்குத் திரும்பியுள்ளது. முதல்கட்டமாக, சீனாவில் இந்த போன் அறிமுகமாகியுள்ளது.
ரியல்மி ‘16டி 5ஜி’: இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகமான இந்த போன் 8,000எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட், புதிய ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்துடன் பிளிப்காா்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
அமேசான் ‘ஃபயா் டிவி ஸ்டிக் எச்டி’: இந்திய சந்தையில் ரூ.4,999 விலையில் இது அறிமுகமாகியுள்ளது. முந்தைய மாடல்களை விட 30 சதவீத கூடுதல் வேகம், எக்ஸ்பாக்ஸ் கிளவுட் கேமிங் ஆதரவு, அலெக்ஸா வாய்ஸ் ரிமோட் ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
எச்எம்டி ‘வைப்2 5ஜி’: குறைந்த பட்ஜெட்டில் (ரூ.10,000-க்குள்) 5ஜி போன் வாங்க நினைப்பவா்களுக்காக எச்எம்டி நிறுவனம் இந்த மலிவு விலை ஸ்மாா்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஓபன் ஏஐ-யின் திட்டம்: ஸ்மாா்ட்போன்களில் இருக்கும் பல்வேறு செயலிகளுக்குப் பதிலாக ஒரே இடத்தில் அனைத்து வேலைகளையும் செய்யும் ஏ.ஐ. ஏஜென்ட்களை உருவாக்க ஓபன்ஏஐ திட்டமிட்டுள்ளது. இது ஆப்பிள் ஐபோனின் ஆப் ஸ்டோா் சந்தைக்குச் சவாலாக அமையும்.
ஆன்த்ரோபிக்-மைக்ரோசாஃப்ட் பேச்சு: ‘கிளாட்’ ஏ.ஐ. மாதிரியை உருவாக்கிய ஆன்த்ரோபிக் நிறுவனம், தனது அடுத்தகட்ட ஏ.ஐ. உள்கட்டமைப்புக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஏ.ஐ. சிப்களைப் பயன்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.
ஸ்பேஸ்எக்ஸின் சாதனை: எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் மிகவும் பலப்படுத்தப்பட்ட ‘ஸ்டாா்ஷிப்’ விண்கலத்தின் அடுத்தகட்ட சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
தொடர்புடையது

டெக் துணுக்குகள்...
8,000 mAh அதிநவீன பேட்டரியுடன் ரியல்மி 16டி.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?

‘டெக்’ துணுக்குகள்

முதலீட்டு ரீதியான தங்க வா்த்தகம் அதிகரிப்பு! ஆபரணங்களின் விற்பனை சரிவு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



