புது தில்லி : வரி அமைப்பில் மாற்றங்கள் குறித்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கோரிக்கைக்களுக்கு செவிமடுக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பங்குகள் விற்பனை மற்றும் இதர நிதி ஆதாரங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரிகளாக நெடுங்கால மூலதன லாபம்(எல்டிசிஜி) வரிவிதிப்பு மற்றும் குறுகிய கால மூலதன லாபம்(எஸ்டிசிஜி) வரிவிதிப்பு உள்ளன.
உலகளாவிய அரசியல் பிரச்னைகள், கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள், அந்நிய முதலீட்டாளர் நிலை, விலைவாசி உயர்வு, வட்டி விகிதங்களால் உள்ளூர் ஈகுவிட்டி சந்தைகள் நிலைத்தன்மை கேள்விகுறியாகியுள்ள சூழலில், இப்போது நடைமுறையில் இருக்கும் வரி அமைப்பு தொடர்பாக பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்கேட்க அரசு தயராக இருப்பதை நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
புது தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், நெடுங்கால மூலதன லாபம்(எல்டிசிஜி) வரிவிதிப்பு மற்றும் குறுகிய கால மூலதன லாபம்(எஸ்டிசிஜி) வரிவிதிப்பு ஆகியவைப் பற்றி அரசு கவனத்தில் கொண்டு செயல்படுகிறது.
வரிவிதிப்பு விவகாரங்களில் கருத்துக்கேட்பதில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை வலியுறுத்துகிறோம். சந்தை தொடர்பான வரி விவகாரங்களில் பங்குதாரர்களுடன் அரசு தொடர்ந்து தொடர்பிலிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆயினும், வரிவிதிப்பு அமைப்பில் மாற்றம் செய்யப்படுமா என்பதைப் பற்றிய உறுதியான அறிவிப்பு ஏதும் நிதியமைச்சர் வெளியிடவில்லை. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்காமல் இருந்திருந்தால், அதன் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்ந்திருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
Summary
Union Finance Minister Nirmala Sitharaman says the government is open to re-evaluating the tax system and will listen to demands & inputs from stock market investors. the government is willing to listen to concerns raised by stock market investors regarding the tax system, including issues related to Long-Term Capital Gains (LTCG) and Short-Term Capital Gains (STCG) taxation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதால் என்னென்ன நன்மைகள்?

வருமான வரிக் கணக்கு ஏன் தாக்கல் செய்ய வேண்டும்?

அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு

கலால் வரியைக் குறைக்காமல் இருந்திருந்தால் பெட்ரோல், டீசல் விலை ரூ. 10 உயர்ந்திருக்கும்: நிர்மலா சீதாராமன்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



