சுடச்சுட

  

  ஆஸ்ட்ரேலியாவில் இருந்து ஏராளமான பெலிகான் பறவைகள் தங்களது இனப்பெருக்கத்துக்காக ஈரோட்டில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு வந்துள்ளன.

  சுமார் 77.18 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பறவைகள் சரணாலயத்தில் தற்போது 300க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து குவிந்துள்ளன. இந்த ஆண்டு வருகை தந்துள்ள பெலிகான் பறவைகள் சில பிரவுன் நிற பறவைகளும் உள்ளன.

  ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவில் இருந்து ஏராளமான பெலிகான் பறவைகள் சுமார் 6000 கி.மீ. தொலைவு தூரம் பறந்து  வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு வருகின்றன. இங்கு சுமார் 4 மாத காலம் தங்கியிருந்து இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த சீசன் காலத்தில் சுமார் 6000 பறவைகள் இந்த சரணாலயத்தில் தங்கியிருப்பது வழக்கம்.

  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத வாக்கில் இப்பகுதிக்கு வரும் பறவைகள், பிப்ரவரி மாத இறுதியில் இங்கிருந்து கிளம்பி தங்களது சொந்த நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றன.  இந்த சமயத்தில், பறவைகள் சரணாலயம், பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துவிட்டதால் இப்பகுதியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. எனினும் வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அப்பகுதியில் தண்ணீரை அதிகரிக்க சரணாலய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

  இங்கு வரும் பறவைகளின் பாதுகாப்புக்கு சரணாலய நிர்வாகம் உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai