சுடச்சுட

  

  சென்னையில் பார்க்க உகந்த இடங்களைப் பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்தோம். அதுமட்டுமல்ல, சென்னையில் இதுபோன்ற சிறந்த, முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் உள்ளன என்பதை கூறத்தான் இந்த கட்டுரை.

  அதில் முக்கிய இடம் வகிப்பது பிர்லா கோளரங்கம்

  சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ளது பிர்லா கோளரங்கம். விண்வெளி அதிசயங்களையும், விண்வெளி ஆராய்ச்சிகளையும், அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பற்றி அறிந்து கொள்ள இந்த கோளரங்கம் உதவுகிறது. பள்ளிச் சிறார்களுக்கு இது மிகவும் பயனுள்ள இடமாகும். இங்கு விண்வெளி பற்றி ஆங்கிலத்திலும், தமிழிலும் எளிதாக புரியும் வகையில் நமக்கு விளக்கமும் அளிக்கப்படுகிறது. இதில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

  அரசு அருங்காட்சியகம்

  1789ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அரசு அருங்காட்சியகம் எழும்பூரில் அமைந்துள்ளது. இதையொட்டி கன்னிமரா பொது நூலகமும், நேஷனல் ஆர்ட் கேலரியும் அமைந்துள்ளது. இந்த அரசு அருங்காட்சியகத்தினுள் சென்றால், பல்வேறு தகவல்களை நாம் பெறலாம். பல அரிய பொருட்களையும், பழைய காலத்தில் வாழ்ந்த விலங்குகள், பறவைகளைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

  பெசன்ட் நகர் கடற்கரை

  கடற்கரை பிரியர்களுக்கு மிகவும் பிடித்த இடம் பெசன்ட் நகர் கடற்கரையாகும். இங்குள்ள அமைதியான சூழ்நிலையும், அருகே அமைந்திருக்கும் தேவாலயம் மற்றும் அஷ்டலட்சுமி கோயில்களும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரக் காரணங்களாகும்.  தற்போது, பெசன்ட் நகர் கடற்கரைக்கு அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட அறுபடை வீடு முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது.

  அமீர் மகால்

  திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது அமீர் மகால், 1789ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது, ஆற்காடு நவப் குடும்பத்தினர் வாழ்ந்த மாளிகையாகும். அரசு அதிகாரிகளின் அனுமதியோடு தான் இதனை சுற்றிப் பார்க்க முடியும்.

  ரயில் அருங்காட்சியகம்

  நியூ ஆவடி சாலையில் ஐசிஎப் அருகே அமைந்திருப்பது ரயில் அருங்காட்சியகமாகும். ரயில்வே துறை துவங்கியது முதல் தற்போது வரையிலான பல்வேறு பரிமாணங்களை இந்த அருங்காட்சியகம் மூலமாக அறிந்து கொள்ளலாம். இங்கு திங்களன்று விடுமுறை விடப்படும். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அருங்காட்சியத்தைக் காண அனுமதிக்கப்படும்.

  இதில்லாமல், சென்னையில் கன்னிமரா நூலகம், எலியட்ஸ் கடற்கரை, உயர்நீதிமன்றம், கலாக்ஷேத்ரா, களங்கரை விளக்கம், மீன் அருங்காட்சியகம், ரிப்பள் பிள்டிங் உள்ளிட்டவைகளும், சென்னை வரும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க ஏற்ற இடங்கள் ஆகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai