Enable Javscript for better performance
கங்கையின் கோர தாண்டவம்! மீண்டுவரும் சிவனார் பூமி! (மினி தொடர் - பகுதி 3)- Dinamani

சுடச்சுட

    

    கங்கையின் கோர தாண்டவம்! மீண்டுவரும் சிவனார் பூமி! (மினி தொடர் - பகுதி 3)

    By சுவாமி ஸுஷாந்தா (இமயத்தில் இருந்து...)  |   Published on : 16th July 2013 01:51 AM  |   அ+அ அ-   |    |  

    sivanarboomi

    3. கண்கள் தந்த சோதனை

    யாத்திரைக்கு வருபவர்களோ இந்த பிரதேசம் பற்றியோ, அதன் தட்ப வெட்ப நிலை குறித்தோ, அங்கு வேண்டிய அடிப்படையான தேவைகள் மற்றும் விஷயங்களை கூட சேகரிக்க வேண்டிய உணர்வை பெறாமலேயே வருபவர்களாய் இருக்கின்றனர்.

    சிலருக்கோ தாங்களை  அழைந்த வந்த டிராவல்ஸ் பெயரோ  அல்லது வழிகாட்டியின் பெயரோ  கூட தெரியாமல் வருவதுடன், ஏதோ இவர்கள் மாநிலத்தில் இருந்து இவர்கள் குழு மட்டுமே வருவது போன்று வந்து , குழுக்களில் இருந்து பிரிந்து சென்று தடுமாறுவார்கள்.

    அந்த அளவிற்கு தங்களது ஊர் கதையையும், உடன் வந்தவர்களின் கதைகளையுமே இடைவிடாது பேசி , வேறு எவ்வித கவனமும் இன்றி வருவார்கள்.

    அவர்களை மட்டும் சொல்லி குற்றமில்லை . கிராமத்தில் இருந்து வரும் இம்மக்கள் அல்லது அவர்களை அனுப்பி வைக்கும் உறவினர்கள் கூட அவர்கள் யாத்திரை நடத்தும் டிராவல்ஸ் பற்றியோ அல்லது அதன் மூலம் ஏற்கனவே பயணம் சென்றவர்களை தனிப்பட்ட முறையில் தொடர்ப்பு கொண்டு அவர்களது அனுபவங்களையோ அறிவதில்லை என்பதே நிதர்சனம்.

    அதே போல ஒரே ஊரில்  இருந்து தெரிந்தவர்கள்  என்று சேர்ந்து வந்தாலும் , குடும்பமாகவோ அல்லது தனியாகவோ வருபவர்கள் உடல்நிலை சரியில்லாது போய்விட்டாலோ பின்வரும் விளைவுகளுக்கு அஞ்சி மனிதத்தன்மையே இல்லாது நடந்து கொள்ளும் சிலரையும் காண நேர்ந்தது என் துரதிர்ஷ்டம் என்பேன்.

    இப்படி பெரும்பாலான பக்தர்கள் வழிகாட்டிகள் சொல்வது எதுவும் அறியாது ,இங்கிருக்கும் நடைமுறைகளையும் அறியாது ஆரத்தி முடிந்தவுடன் அறைகளுக்கு திரும்ப ஆரம்பித்து விடுவர்.

    இப்படிப்பட்ட நிலையில்தான் கேதாரத்தில் ஹோட்டல் வைத்திருந்த குப்தகாசி பிரமுகர் ஒருவர் என்னை நலம் விசாரித்தார். என் நிலை உணர்ந்து அவரது பொருட்கள் வைத்திருந்த அறையில் நான் படுத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்தார்.

    அது குடோன் கூட  அல்ல. உபயோகப்படுத்தாத பொருட்கள்  தூசு படிந்து குப்பையாய் இருந்தன. இணைக்கப்பட்ட ஒரு பாத்ரூம் இருந்தது. அது அதை விட குப்பையாகவும் , சுத்தமின்றியும் இருந்தது. அந்த அறையை பணியாளர்கள் கழிப்பறைக்கு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

    பாவம் அவர்கள்  காலை 5 மணிக்குள் காலைக் கடன்களை  முடித்து கடையில் வேலை செய்ய  ஆரம்பித்தால் இரவு 10 மணி வரை தொழில்தான். மஹாராஷ்ட்ரா மண்டல் பணியாளர்கள் சுத்தப்படுத்த உதவி செய்தார்கள்.

    இதன் மூலம் நான் படுப்பதற்கு ஏற்ற வகையில் 10க்கு 5 அடி இடம் கிடைத்ததுடன், கழிப்பறையும் மிக சுத்தமாக ஆகியது. அந்த தொழிலாளர்களுக்கு நல்ல தூய்மையான கழிவறையை அளிக்க முடிந்தது எனக்குள் மிக திருப்தி உண்டாகியது என்பேன்

    தங்குமிடம் தயாரானவுடன்  வயிறு பசித்தது . பத்ரி கேதார் கோவில் சமிதியின் ஆளுமைக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் அன்னதானத்திற்கு நன்கொடை என்று சொல்லி பக்தர்களிடம் நன்கொடை பெற்றாலும் , எங்கே அன்னதானம் அளிக்கிறார்கள், எத்தனை மணிக்கு அளிக்கின்றனர் என்பதை 1 வருட காலமாகியும் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை.

    அதே சமயம் கோவிலுக்கு பின்புறம் ஹரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்தில் இருந்து ஒரு பக்தர் குழுவும், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே சந்திரகிரி சுவாமியும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் டீ இலவசமாய் வழங்கினார்கள்.

    அதிலும் சந்திரகிரி சுவாமி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திருப்பணியை மிக  சிரத்தையுடன் செய்து வருபவர். அங்கு உள்ளுர் மக்களுக்கும், டோலி மற்றும் போனி வாலாக்களுக்கும்  நோ என்ட்ரி . யாத்ரீகர்களுக்கு மட்டுமே. இவர்களால் என் உணவுப் தேவையும் பார்த்துக் கொள்ளப்பட்டது.

    இருந்த போதும் உணவு , குளிக்க வென்னீர் என்று வேறு எந்த தேவையாக இருந்தாலும் மஹாராஷ்ட்ரா மண்டலின் உரிமையாளரும் அவர் தம் தம்பிகளும் தங்கள் குடும்பத்தினரைப் போல கவனித்துக் கொணட்னர்.

    அதனால் காலையில் எனது பயிற்சிகளை முடித்த பிறகு , மஹாராஷ்ட்ரா மண்டலில் அன்பர்களோடு சில நிமிடம் உரையாடி அன்பை பரிமாறி , டீ குடித்து , கோவிலுக்கு சென்று கேதாரநாதனின் தரிசனம் பெற்று, ஆதிசங்கரரின் யோக சமாதி மண்டபத்திற்கு சென்று அமர்ந்தால் மாலை 3,30 மணி வரை அவரது அருளில் நேரம் கடந்து விடும்.

    பின்பு மாலை 5.30 மணிக்கு ரெடியாகி ஆலயத்திற்கு சென்றால் எனது தியானத்தை முடித்து , பக்தர்களுக்கு தகவலுதவி புரிந்து , அலங்கார தரிசனம் கண்டு களித்து ஆரத்தி தரிசனம் பெற்று வந்தால் இரவு 8.30 மணிக்கு நாள் முடிந்துவிடும்.

    எல்லா நாட்களும்  எல்லா நேரங்களிலும் ஹிந்தி மொழி பேசத் தெரியாத தென்னிந்திய மக்கள் யார் வந்து தடுமாறிக் கொண்டிருப்பதை கண்ட மக்கள் , என் உதவியை பெற்றுக் கொண்டனர். இதனால் கேதார் நாத் இருந்த பெரும்பாலான மக்களுக்கும் , பண்டிட்களுக்கும், அதிகாரிகளிக்கும் நண்பனானேன்.

    கொஞ்சம் கொஞ்சமாக கேதாரத்தில் நிரந்தரமாக எவ்வளவு வருடம் இருக்க முடியுமோ அவ்வளவு நாட்கள் இருக்க வேண்டும் என்கிற ஆவல் மலர ஆரம்பித்தது.

    ஏனோ மனம் இன்னும்  சில வருடங்கள் இங்கு  இருக்க வேண்டும் என்று மிகுந்த  பிரயாசைப் பட்டது. அதற்கேற்றார் போல மஹாராஷ்ட்ரா மண்டல் குடும்பத்தின் நிரந்தர அங்கமாக வாக்காளர் பட்டியலில் சேர்த்து கேதாரநாதன் தன் நகரில் குடியுரிமை அளித்தான்.

    கடந்த வருடம் அக்டோபர் , நவம்பர் மாதங்களில் – 10, - 12 ,-14 என மிகக் குறைந்த பட்சமாக -8 டிகிரி தட்பவெட்ப நிலையை குளிராக அனுபவித்த என்  சரீரம் தற்போது 20 டிகிரிக்கு குப்தகாசியில் இருப்பதைப் போன்றே இருந்தது.

    இந்த பொன்னான  வெயில் காலம் உணர்ந்தே ஏராளமானவர்கள்  இந்த இரு மாதங்களில் பயணம்  மேற்கொள்ளுவதை அனுபவமாய்  தெரிந்து கொண்டேன். ஆனால்  இங்கு பொதுவாக மே 20 தேதிக்கு மேலேயே எப்போது வேண்டுமானாலும் மழை துவங்கலாம் என்று முன்பு வந்த போதெல்லாம் சொல்லக்  கேள்விப்பட்டுள்ளேன்.

    ஆனால் ஜுன் முதல்  வாரம் முடிந்தும் , இம்மாதம் முழுவதும் இங்கு வெயில் காலம் என்பதை தெரிந்து கொண்ட  போது முதலில் ஆச்சரியப்பட்டேன். ஆனால் அன்றைய நாளே இவ்வருடம்  முன்னதாகவே மழை துவங்க வாய்ப்பிருப்பதாக வானிலைச் செய்திகளில் அறிந்தேன்.

    மழைக் காலம் நெருங்கிக் கொண்டு இருந்தது என்பதை மெல்லிய குளிர் தென்றலும் அவ்வப்போது தூறிய ஆசிர்வாதங்களும் அறிவிக்க ஆரம்பித்தன.

    அது மட்டுமல்லாது இங்கு மிகப் புனிதமான ஸ்ரவண  மாதம் நெருங்கிக் கொண்டு இருந்தமையால் பலரும் அம்மாத விசேஷ பூஜைகளிலும் . சம்பிரதாயங்களிலும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர்.

    ஆனால் மெலிதாக துவங்கிய தூறல் மெதுவாக வலுப்பெற ஆரம்பித்தது. அது கொண்டு வரப் போகும் எதிர்காலத்தை அறியாமல் என்னுள் ஆனந்தமாய் இருந்து கொண்டிருந்தேன்.

     

    sivanarboomi.jpg

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp