வருட இறுதி சுற்றுலாவிற்குத் திட்டமிடுகிறீர்களா? கவர்ச்சிகர தனிநபர் கடனுடன் அதனைச் சாத்தியப்படுத்துங்கள்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கும் வேளையில் அதனை ஒரு சுற்றுலாவோடு கொண்டாட நீங்கள் விரும்பலாம். அதிர்ஷ்டவசமாக விடுமுறைக்கால கடன் வசதிகள் உங்கள் கைவசம் இருக்கும் போது...
வருட இறுதி சுற்றுலாவிற்குத் திட்டமிடுகிறீர்களா? கவர்ச்சிகர தனிநபர் கடனுடன் அதனைச் சாத்தியப்படுத்துங்கள்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கும் வேளையில் அதனை ஒரு சுற்றுலாவோடு கொண்டாட நீங்கள் விரும்பலாம். அதிர்ஷ்டவசமாக விடுமுறைக்கால கடன் வசதிகள் உங்கள் கைவசம் இருக்கும் போது, நியூயார்க்குக்கோ அல்லது துபாய்க்கோ செல்ல விரும்பும் உங்கள் திட்டத்தை நீங்கள் ஒத்திவைக்க வேண்டியதில்லை!

பஜாஜ் பின்சர்வ் தனிநபர் கடன் போன்ற வசதிகள் நீங்கள் சுற்றுலா  செல்ல விரும்பும் இடங்களுக்கு தேவையான நிதியுதவியை உங்களக்கு அளிக்கிறது. இந்தக் கடன் வசதியானது உங்களது பயணத்திற்கான  டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் இருந்து, தங்குமிடங்கள்  ஏற்பாடு செய்தல், இடங்களை சுற்றி பார்ப்பதற்கான ஏற்பாடு மற்றும் அங்கு நேரக்கூடிய செலவுகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கவனித்துக் கொள்ள உதவுகிறது.

அடமானம் ஏதுமின்றி பெரிய தொகையைக் கடனாகப் பெற்றிடுங்கள்!

எத்தனைதான் முன்கூட்டித் திட்டமிட்டு சேமித்து வைத்திருந்தாலும் சுற்றுலா என்பது செலவு பிடிக்கக் கூடிய ஒரு விஷயம். அதுவும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைக் காலங்களில் எல்லாவற்றுக்குமான கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்து விடும், அத்தகைய தருணங்களில் 'பஜாஜ் பின்சர்வ்' மூலம் பெறக்கூடிய கடன் மூலமாக உங்களது பணத்தேவையை நீங்கள்  எளிதாக சமாளித்து விடலாம்.

'பஜாஜ் பின்சர்வ்' மூலமாக நீங்கள் ரூ. 25 லட்சம் வரையிலும் கடன் தொகையினை எந்த ஒரு சொத்தையும் உத்தரவாதத்திற்காக அடமானம் வைக்காமல் பெற்றுக்  கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல் இந்தத் தொகையினை நீங்கள் எப்படி செலவழிக்க வேண்டும் என்பது தொடர்பான கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் உங்கள் பயணத்திட்டத்தில் உங்கள் விருப்பம் போல் அதைச் செலவழிக்கலாம்.

கடனை அறுபது மாதங்கள் வரையிலான சுலபத் தவணைகளில் திரும்பிச் செலுத்தலாம்!

புத்தாண்டிற்கு இன்னும் குறைந்த அவகாசமே இருப்பதால் உங்களது பயணத்திற்கான பொருளாதாரத்  திட்டமிடலை அவசரமாகச் செய்ய வேண்டியதில்லை. எங்களது தனிபர் கடன் கால்குலேட்டர் மூலமாக கடனைத் திருப்பிச் செலுத்துதல் குறித்து எளிதாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

இதில் உங்களது கடன் தொகை, வட்டி வீதம் மற்றும் திரும்பிச் செலுத்தும் காலம் ஆகியவற்றை உள்ளிட்ட உடனேயே, உங்களுக்கான மாதாந்திரத் தவணைத் தொகை மற்றும் ஒட்டுமொத்தமாகச் செலுத்தும் வட்டி ஆகியவை குறித்த தகவல்கள் தெரிய வரும். அதனைப் பொறுத்து நீங்கள் அசல் தொகையைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது திரும்பிச் செலுத்தும் காலம் /  மாதாந்திரத் தவணைத் தொகையில் மாறுதல்கள் செய்து கொள்ளலாம். 

எதிர்பாராத செலவுகளுக்காக பிளக்சி லோன்!

உங்களது பயணத்தின்போது நிகழும் எதிர்பாராத செலவீனங்களைச் சமாளிக்க பஜாஜ் பின்சர்வ் உங்களுக்காகவே 'பிளக்சி லோன்' வசதியை வழங்குகிறது. இதன்வழியாக ஏற்கனவே உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தொகையில் இருந்து தேவையான தொகையினை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக உங்களுக்குத் தனியான செலவோ அல்லது ஆவணங்கள் சமர்ப்பிப்போ தேவை இல்லை. இதற்காக ஒட்டுமொத்த தொகைக்கு அல்ல.. நீங்கள் பெற்றுக் கொள்ளும் தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும். அத்துடன் கடனைத் திரும்பிச் செலுத்தும் ஆரம்ப கட்டத்தில் வட்டிக்கான மாதாந்திரத் தவணை மட்டும் செலுத்தினால் மட்டும் போதுமானது.

எளிதாக்கப்பட்ட ஆவணங்களைக் கையாளும் முறை

இத்தகைய தருணங்களில் கடனுக்கான ஆவணங்களை விரைவாக கையாளுதல் ஒரு முக்கியமான விஷயமாகும். பஜாஜ் பின்சர்வ்வை பொறுத்தவரை கடன் பெறுவதற்கு எளிதான தகுதி விபரங்கள் மற்றும் ஆவணங்களைக் கையாளுவதற்கு ஆகக் குறைந்த நேரம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

எனவே கடன் அளிப்போரின் இணையத்தளத்தில் விண்ணப்பித்து, தேவையான கே.ஒய்.சி ஆவணங்கள் மற்றும் நிதி விபரங்கள் தொடர்பான தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் கிடைத்தவுடனே கடன் தொகை உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.  

பஜாஜ் பின்சர்வ்வை பொறுத்தவரை நீங்கள் ஆவணங்களை சமர்ப்பித்த ஐந்து நிமிடங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அடுத்த 24 மணி நேரத்தில் தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.   எனவே நீங்கள் சந்தோசமாக உங்களது பயணத்திட்டத்தில் மட்டுமே  கவனம் செலுத்தலாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com