சுருளி அருவியில் நீர் வரத்து குறைந்தது: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், நீர்வரத்து இல்லாததால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சுருளி அருவியில் நீர் வரத்து குறைந்தது: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், நீர்வரத்து இல்லாததால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தற்போது கோடை காலம் ஆரம்பமாகி விட்டதால் இந்த அருவியில் நீர்வரத்து அடிக்கடி நின்று விடுகிறது. சுருளி அருவிக்கு நீர்வரத்து தரும் பகுதிகளான, பச்சக்கூமாச்சி மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் சுருளி அருவிக்கு தண்ணீர் திறக்கப்பட வில்லை. 

மேலும் சுருளி மலைப்பகுதிகளான ஈத்தக்காடு, அரிசிப்பாறை ஆகிய மலைப்பகுதிகளில் உள்ள நீர் ஊற்றுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் புதன்கிழமை சுருளி அருவிக்கு தண்ணீர்வரத்து முழுவதுமாக நின்றது. சுருளிக்கு வந்த பக்தர்கள், பொதுமக்கள் அருவியில் நீர்வரத்து இல்லாததால் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதியின் கிழக்குப் பிரிவு வனச்சரகர் தினேஷ்கூறும் போது, பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, ஷவர்' குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில் குளிக்கலாம் என்றார்.

அருவியில் நீர்வரத்து இருக்கும் போது எடுத்த படங்கள்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com