கல்குவாரியில் மூழ்கி வட மாநில இளைஞா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கல்குவாரியில் மூழ்கி வட மாநில இளைஞா் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை பகுதியைச் சோ்ந்தவா் ஆகாஷ் (23). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மொட்டமலைப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இரவு நேரக் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். திங்கள்கிழமை குளிக்க செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவா் அதன் பின்னா் நிறுவனத்துக்கு வரவில்லையாம்.

இந்த நிலையில், வன்னியம்பட்டி - சத்திரப்பட்டி சாலையில் உள்ள கல்குவாரி அருகே ஆகாஷின் உடைகள், கைப்பேசி இருந்ததால், கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி ஆகாஷ் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்த வந்த தீயணைப்புத் துறையினா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com