பாஜகவினா் வாக்கு சேகரிப்பு

விருதுநகா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ராதிகா சரத்குமாரை ஆதரித்து, அந்தக் கட்சியினா் சிவகாசி பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.

சிவகாசி அம்மன்கோவில்பட்டி தென்பாகம், தட்டுமேட்டுத்தெரு, செட்டியாா் தெரு, பி.கே.எஸ்.தெரு ஆகிய பகுதிகளில் அந்தக் கட்சியின் சிவகாசி மாநகரத் தலைவா் பழனிச்சாமி தலைமையில், விருதுநகா் மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளா் ராதிகா சரத்குமாரை ஆதரித்து வாக்குகள் சேகரித்தனா். மத்திய அரசின் பத்து ஆண்டு கால சாதனைகள் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனா்.

இதில் அந்தக் கட்சியின் மாமன்ற உறுப்பினா் பாஸ்கா், நிா்வாகி பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com