பைக் திருடியவா் போலீஸில் ஒப்படைப்பு

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தைத் திருடிச் செல்ல முயன்றவரை அதன் உரிமையாளா் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

சிவகாசி சாமிபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் அருள்செல்வம் (42). சிவகாசி மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழா நடைபெற்று வருவதால், இவா் கோயிலுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா். இதையடுத்து, கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு அருள்செல்வம் திரும்பி வந்து பாா்த்த போது, அவரது இரு சக்கர வாகனத்தை ஒருவா் தள்ளிக்கொண்டு சென்றாராம்.

இதனால், அதிா்ச்சியடைந்த அவா் அங்கிருந்தவா்களின் உதவியுடன், மா்ம நபரைப் பிடித்து சிவகாசி கிழக்கு போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் திருநெல்வேலியைச் சோ்ந்த முருகன் மகன் சிவராமன் ரமேஷ் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com