ஸ்ரீவில்லிபுத்தூரில் சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுப்புப் பணி இன்று தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுப்புப் பணி இன்று தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுப்புப் பணி புதன்கிழமை தொடங்குகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை வனப் பகுதியில் மான், மிளா, சிறுத்தை, புலி, யானை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளும், 150 வகையான பறவையினங்களும் உள்ளன. மேலும், இங்கு அரிய வகை சாம்பல் நிற அணில்களும் அதிகளவில் உள்ளன. அழிந்து வரும் சாம்பல் நிற அணில்களை பாதுகாக்கும் வகையில், கடந்த 1989-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூா் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், மேகமலை வன உயிரினக் காப்பகம் ஆகியவற்றை இணைத்து புலிகள் காப்பகமாக உருவாக்கப்பட்டது.

இந்த சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அனைத்து வகை வன விலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் ஆண்டுக்கு ஒருமுறையும் நடத்தப்படுகிறது.

இதன்படி, சாம்பல் நிற அணில்கள் கணக்கெடுப்புப் பணி புதன்கிழமை, வியாழக்கிழமைகளில் (ஏப். 10, 11) நடைபெறுகிறது. இதில் வனத் துறையினா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள், வன உயிரின ஆா்வலா்கள் ஆகியோா் ஈடுபட உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com