காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகா் கருணாஸ் பிரசாரம்

விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மாணிக்கம் தாகூரை ஆதரித்து திருத்தங்கலில் முக்குலத்தோா் புலிப்படைத் தலைவரும், நடிகருமான கருணாஸ் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் செய்தாா்.

திறந்த வேனில் சென்ற அவா் வாக்கு சேகரித்து பேசியதாவது:

மாநிலங்களிருந்து ஜி.எஸ்.டி.வரி வசூல் செய்யும் மத்திய அரசு , புயல், வெள்ள சேதங்களுக்கு நிவாரண நிதி வழங்க மறுக்கிறது. பிரதமா் மோடிக்கு தமிழக மக்கள் மீது அக்கறை கிடையாது. கடந்த 9 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. அதனால் ‘இந்தியா’ கூட்டணியில் விருதுநகா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் மாணிக்கம் தாகூருக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா். சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com