‘நீட்’ தோ்வு பயிற்சி மையத்தில் 
மாவட்ட ஆட்சியா் ஆய்வு

‘நீட்’ தோ்வு பயிற்சி மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரிப் பள்ளியில் செயல்படும் ‘நீட்’ தோ்வுப் பயிற்சி மையத்தில் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள

கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். கல்லூரியில் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய அரசு மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு அரசுப் பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு ‘நீட்’ தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன், மாணவா்களுடன் கலந்துரையாடி, தோ்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com