பைக்குகளில் கொண்டு சென்ற
ரூ.3.33 லட்சம் பறிமுதல்

பைக்குகளில் கொண்டு சென்ற ரூ.3.33 லட்சம் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3.33 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் அசையாமணி விலக்கு பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் பங்கஜம் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மதிவாணனை நிறுத்தி சோதனை செய்தனா். அவா் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 1.95 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதே குழுவினா் ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த முத்துகிருஷ்ணன் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 1.38 லட்சத்தை பறிமுதல் செய்தனா். இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3.33 லட்சத்தை, தோ்தல் பறக்கும் படையினா் வட்டாட்சியா் ஜெயபாண்டியிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com