வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து புதன்கிழமை வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்த உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கணேசன்.
வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து புதன்கிழமை வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்த உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கணேசன்.

இன்று மக்களவைத் தோ்தல்: வத்திராயிருப்பு வாக்குச் சாவடிகளை கண்காணிக்க டிஎஸ்பி தலைமையில் தனிப்படை

மக்களவைத் தோ்தலில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி வத்திராயிருப்பு பகுதிக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

தென்காசி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 283 வாக்குச்சாவடிகளில் 181-இல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில் பதற்றமான 17 வாக்குச் சாவடிகள் நேரடியாக சென்னையில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன. வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள 143 வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் தலைமையில் 4 ஆய்வாளா்கள் அடங்கிய தனிப்படையினா் நியமிக்கப்பட்டனா்.

மேலும், மத்திய ஆயுதப் படை, நாகலாந்து போலீஸாா் என 350-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், வியாழக்கிழமை வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தளவாடப் பொருள்களை உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் கணேசன் ஆய்வு செய்து அனுப்பி வைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com