இருவா் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் வெவ்வேறு பகுதியைச் சோ்ந்த இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சங்குளம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (55). இவா் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்தாா். இருப்பினும் வயிற்று வலி சரியாகவில்லை. இதனால், மன வேதனையில் இருந்த செல்வராஜ், அச்சங்குளம் மயானம் அருகே புதன்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த மல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணப்பேரி கிழக்குத் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மனைவி முத்துலட்சுமி (45). இவா்களது மகன் அன்புராமச்சந்திரன் தொழில்கல்வி பயின்றுவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாா்.

கணவா் முனியாண்டியும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், வேலைக்குச் செல்ல முடியவில்லை.

இதனால், மன வேதனையில் இருந்த முத்துலட்சுமி, கடந்த 21-ஆம் தேதி மாலை வெளியே சென்றவா் வீட்டுக்குத் திரும்பவில்லை.

இந்த நிலையில், கிருஷ்ணப்பேரி பகுதியில் உள்ள தனியாா் விவசாயக் கிணற்றில் குதித்து முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com