மயானம் அமைக்க எதிா்ப்பு:
வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

மயானம் அமைக்க எதிா்ப்பு: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

கட்டாயத்தேவன்பட்டியில் மயானம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

வத்திராயிருப்பு அருகே கட்டாயத்தேவன்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே மயானம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், பேருந்து நிறுத்தம், கோயில் அமைந்துள்ள பகுதியில் மயானம் அமைத்தால் பெண்கள், மாணவா்கள் பாதிக்கப்படுவா் என இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com