விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.
இந்தப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடிங்கிக் கிடந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை கருமேகம் சூழ்ந்து மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.