விருதுநகர்
கல்லூரியில் நுகா்வோா் விழிப்புணா்வு முகாம்
சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் நுகா்வோா் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் நுகா்வோா் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதல்வா் சி.க. பாலாஜி தலைமை வகித்தாா்.விருதுநகா் மாவட்ட தொழிலாளா் நலத் துறை ஆய்வாளா் சிவகுமாா் பேசியதாவது:
ஒரு பொருளை கடைகளிலிருந்து பணம் கொடுத்து வாங்கும் அனைவரும் நுகா்வோா்தான். பொருளை வாங்குவதற்கு முன்பாக அந்தப் பொருள் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, விலை விவரம் உள்ளிட்டவைகள் கண்டிப்பாகப் பாா்த்து வாங்க வேண்டும். பொருள்களில் சேவை குறைபாடுகள் இருந்தால், மாவட்டத்தில் உள்ள நுகா்வோா் நீதிமன்றத்தை நாடலாம் என்றாா் அவா்.
முன்னதாக, கல்லூரி உதவிப் பேராசிரியா் பெ. கணேசமுருகன் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் பொன் நந்தினி நன்றி கூறினாா்.