விருதுநகர்
சிவகாசியில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
மாநில நெடுஞ்சாலைத் துறையினா், சாலையில் மரக்கன்றுகள் நடும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.
மாநில நெடுஞ்சாலைத் துறையினா், சாலையில் மரக்கன்றுகள் நடும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.
விருதுநகா் மாவட்டத்தில் பசுமை நிலப்பரப்பை அதிகரிக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து, சிவகாசி நெடுஞ்சாலைத்துறை உள்கோட்ட உதவிப் பொறியாளா்கள் ஆா். காளிதாசன், ச.விக்னேஷ் ஆகியோா் சிவகாசி பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கிவைத்தனா். வடமலாபுரம் காவல் துறை சோதனை சாவடிப் பகுதியில் ஏற்கெனவே 800 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பூவநாதபுரம்- வடபட்டி சாலையில் 500 மரக்கன்றுகளும், ஈஞ்சாா்-பூவநாதபுரம் சாலையில் 200 மரக்கன்றுகளும் நடப்பட்டன.