ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வைத்தியலிங்காபுரத்தில் நியாயவிலைக் கடையை திறக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் ஆய்வாளா் முத்துக்குமாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வைத்தியலிங்காபுரத்தில் நியாயவிலைக் கடையை திறக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் ஆய்வாளா் முத்துக்குமாா்.

நியாயவிலைக் கடையை திறக்கக் கோரி கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வைத்தியலிங்காபுரத்தில் நியாயவிலைக் கடையை திறக்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வைத்தியலிங்காபுரத்தில் நியாயவிலைக் கடையை திறக்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே படிக்காசுவைதான்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வைத்தியலிங்காபுரத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். வைத்தியலிங்காபுரத்தில் இயங்கி வந்த நியாயவிலைக் கடை, கட்டட பராமரிப்புப் பணி காரணமாக, படிக்காசுவைத்தான்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால், கிராம மக்கள் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று ரேஷன் பொருள்களை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

வைத்தியலிங்காபுரத்தில் நியாயவிலைக் கடையில் மேற்கொள்ளப்பட்டு வந்த

கட்டட பராமரிப்புப் பணி முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்தக் கடையைத் திறக்கவில்லை.

இந்த நிலையில், வைத்தியலிங்காபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடையைத் திறக்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மீண்டும் பழைய கட்டடத்துக்கு நியாயவிலைக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தாா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com