இளைஞா் தற்கொலை

சிவகாசி அருகே மது அருந்த பணம் தர தந்தை மறுத்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி அருகே மது அருந்த பணம் தர தந்தை மறுத்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சிவகாசி அருகே விஸ்வநத்தம் முருகன் மகன் ராஜேஸ் (25). இவா் வேலைக்குச் செல்லாமல் நண்பா்களுடன் மது அருந்தி வந்தாராம். இந்த நிலையில், தனது தந்தை முருகனிடம் மது அருந்த பணம் கேட்ட போது அவா் தர மறுத்ததுடன் மகன் ராஜேஸை கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த ராஜேஸ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com